2வது பெரிய நகரான காந்தகாரை கைப்பற்றிய தலிபான்கள்…!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்குள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வருகிறது.

ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். ஆப்கன் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயன்று வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரண்டு மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தலிபான்கள் செய்தித் தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில், காந்தகார் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டது. நகரத்தில் உள்ள தியாகிகள் சதுக்கத்தை முஜாகிதீன்கள் அடைந்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!