பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு என்னாச்சு..?

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரைக் காணலாம்.

இந்நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதௌ இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!