விரைவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன்!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசனுக்கான துவக்கப் பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம். தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி, இதுவரை 4 சீசன்கள் வரை ஒளிப்பரப்பாகியுள்ளது.

எப்போதும் ஜூன் மாத இறுதியில் துவங்கி, அடுத்த 4 மாதத்திற்குள் பிக்பாஸ் முடிக்கப்பட்டு விடும். ஆனால் கொரோனா பிரச்னையால் கடந்த 3-வது சீசன் செப்டம்பரில் துவங்கி ஜனவரியில் முடிந்தது.

இந்தாண்டு கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய சீசனுக்கான தயாரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இந்தாண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பரில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி புதிய சீசனுக்கான துவக்கப் பணிகள் தொடங்கியுள்ளது. ஐந்தாவது சீசனுக்கு ஏற்றது போன்ற வீட்டை அமைப்பை நிகழ்ச்சிக் குழுவினர் தயாரித்து வருகின்றனர். விரைவில் அங்கு கமல்ஹாசனை வைத்து ப்ரோமோ ஷுட் நடத்தப்படவுள்ளது.

அதேபோல புதிய சீசனுக்குரிய போட்டியாளர்களும் இறுதிசெய்யப்பட்டுள்ளார்கள். பெருபாலும் விஜய் டிவி நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் சன் டிவி, ஜீ தமிழ் டிவி போன்ற தொலைக்காட்சி பிரபலங்கலும் பிக்பாஸ்- 5யில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- source: ciniexpress * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!