மறைந்த நடிகை ஜெயந்திக்கும், நடிகர் பிரசாந்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.!

தமிழ், மலையாளம், கன்னடம் என 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை மறைந்த ஜெயந்தி நடிகர் பிரசாந்தின் பாட்டி ஆவார்.

1945ம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி பிறந்த நடிகை கமலா குமாரி என்கிற ஜெயந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியை பூர்வீகமாக கொண்டவர். மிஸ் லீலாவதி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாருடன் 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான படங்களில் 1960களில் துவங்கி நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தனது கணவரை பிரிந்த அவர் பெங்களூரில் தனது மகன் உடன் வசித்து வருகிறார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் 76 வயதான, நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். மேலும் மறைந்த நடிகை ஜெயந்தி ஒரு வகையில் நடிகர் பிரஷாந்தின் சின்னபாட்டி என்பது தெரியவந்துள்ளது. நடிகர் தியாகராஜனின் மனைவி பெயர் சாந்தி இவர் மறைந்த பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகரான பெகட்டி சிவராமின் மகள் ஆவார். இந்த பெகட்டி சிவராமுக்கு மொத்தம் 2 மனைவிகள் அதில் 2வது மனைவிதான் மறைந்த நடிகை ஜெயந்தி. இயக்குனர் பெகட்டி சிவராமுக்கு முதல் முனைவி மூலம் 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவருக்கு நடிகை ஜெயந்தி மூலம் ஒரு மகனும் உள்ளனர். முதல் மனைவியின் மகள் தான் பிரசாந்த்தின் தாயார் சாந்தி. அந்த வகையில் நடிகர் பிரஷாந்த்துக்கு அவர் சின்ன பாட்டி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: 1news * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!