சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மாஸ்டர் பிளான்… சிக்கிய 26 வயது பெண்!

ஆந்திராவில் படங்களை மிஞ்சும் அளவிற்கு மாஸ்டர் பிளான் போட்டு 3-வது திருமணம் செய்ததோடு, பணம் நகையினைக் கொள்ளையடித்து சென்ற வழக்கில் என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமாக்களில் தான் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமணமான ஆண், பெண் யாராக இருந்தாலும் வேறொருவரை ஏமாற்றி திருமணம் செய்வதைப் பார்த்திருப்போம். அப்படியான விஷயங்கள் தற்போது அதிகரித்தும் வருகிறது. அப்படித்தான் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அடக்கமாகவும் தெரிந்த பெண்களைப் பார்த்தால் அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வருவதுபோல, சித்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான சுஹாசினி என்ற பெண்ணுடன், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்த சுனில் நட்புடன் பழகி வந்துள்ளார். நன்றாக போய்க்கொண்டிருந்த நட்பு காதலில் முடிந்து இவர்கள் இருவரும் காதல் வயப்படத்தொடங்கிவிட்டனர்.

இந்நேரத்தில் தான் எனக்கு யாரும் இல்லை, நான் அனாதை என்று தெரிவித்த நிலையில் தான், சுனில் தனது குடும்பத்தாரிடம் பேசி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்துதான் இவர்களது வாழ்வில் பிரச்சனை தொடங்கியது. தன்னுடைய தாய்மாமன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவே பணம் தேவை என சுனிலின் தந்தையிடம் பெற்றுள்ளார் சுஹாசினி. இத்தகவலை அறிந்த சுனில், ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு தான் 2 லட்சம் வாங்கியுள்ள நிலையில், ஏன் தற்பொழுது மீண்டும் பணம் வாங்கியிருக்கிறாய்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் சுஹாசினியால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியவில்லை. இதனையடுத்து சுனில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்று விட்டார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சுனில், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருந்த நிலையில்தான், தன்னிடம் இருந்த சுஹாசினியின் ஆதாரில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள், ஏற்கனவே இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது என கூறியுள்ளனர். தான் ஏமாந்துவிட்டோம் என்று புலம்பிய சுனில் இதுக்குறித்து அலிபிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏமாற்றி திருமணம், பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர்.

போலீசாருக்கு தலைசுற்றும் அளவிற்கு தான் விசாரணையில் தகவல் கிடைத்தது. ஆம், சுஹாசினி என்ற இந்தப்பெண் வினய் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதோடு அவரிடம் பணமோசடி செய்ததாக வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது தெரியவந்தது.

ஒரு மாத காலமாக இப்பெண்ணை போலீசார் தேடிவந்த நிலையில்தான், திருப்பதியில் சிவிம்ஸ் மருத்துவமனை அருகே சுற்றித்திரிந்த சுஹாசினியை போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த 3 பேரை தவிர்த்து வேறு யாராவது சுஹாசினியின் காதல் வலையில் சிக்கி வாழ்க்கையையும், பணத்தையும் இழந்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.- source: abp-epaper * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!