மார்கஸ் ரஷ்போர்டுக்காக சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்.!

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிறுவன் எழுதிய கடிதம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள்.

எனவே அவர்களை கடுமையாக விமர்சித்தனர். இதில் முக்கியமாக இங்கிலாந்து ராணியிடமிருந்து எம்.பி.இ.பட்டம் பெற்ற மார்கஸ் ரஷ்போர்ட் தான் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளானார். இவர் பல மக்களுக்கு சேவைகள் செய்திருக்கிறார். எனவே நாட்டில் உள்ள சிறுவர்கள் ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் டெக்ஸ்டெர் ரொஷியர் என்ற 9 வயதுடைய சிறுவன், தான் ஹீரோவாக நினைக்கும் மார்கஸ் ரஷ்போர்ட்டிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது பலரையும் நெகிழச் செய்துள்ளது. இக்கடிதத்தை நேரலையில் படித்த பிரபல பத்திரிக்கையாளர் நேரலையில் கண் கலங்கினார். அந்த கடிதத்தில், சிறுவன் எழுதியிருப்பதாவது,

டியர் மார்கஸ் ரஷ்போர்ட், கடந்த ஆண்டில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தீர்கள். நேற்று, அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படைய செய்துள்ளீர்கள்.

உங்களை எண்ணி பெருமையடைகிறேன். மோசமான சம்பவங்களை புறக்கணியுங்கள்.. நீங்கள் என்றும் எங்களின் நாயகன் தான் என்று சிறுவன் எழுதி உள்ளார். எனவே இங்கிலாந்து நாட்டின் முகம் இச்சிறுவனின் கடிதத்தில் வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்த கடிதத்தை வாசித்த இரு ஊடகவியலாளர்களும் கண்கலங்கியதுடன், இது தான் உண்மையில் இங்கிலாந்தின் முகம் என சிறுவனின் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

9 வயது சிறுவன் எழுதிய கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் சுசண்ணா ரெய்டு கண்ணீர் அடக்க முடியாமல் நேரலையில் தேம்பியுள்ளார்.

அவருடன் அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான ரன்வீர் சிங் என்பரும் கண்கலங்கியுள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!