வருடத்தில் 300 நாட்களை தூங்கியே கழிக்கும் நவீன கும்பகர்ணன்!

புர்காராம் இப்படி நாள்கணக்கில் தூங்குவதெல்லாம் இந்த ஆண்டோ, சென்ற ஆண்டு நிகழ்ந்ததோ அல்ல. சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் என்ற பாத்திரம், வருடத்தின் 6 மாதங்களை தூங்கியும், விழித்திருக்கும் மற்ற 6 மாதங்களில் சாப்பிட்டும் நேரத்தை கழித்து வந்தார் என்பதை நாம் அறிந்திருப்போம்.

ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் வருடத்தில் 300 நாட்களை தூங்கி கழிக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம் ( வயது 42 ) பலசரக்குக் கடையை நடத்திவருகிறார். இவருக்கு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது இவரது தூக்கம்.இவர் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களைத் தூங்கியே கழிக்கிறார்.

ஆரம்பத்தில் ஒரு நாள், இரண்டு நாள்கள், பிறகு ஒரு வாரம் என்றிருந்த இவரது தூக்கம், ஒரு மாதத்துக்கு 25 நாள்கள் எனத் தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றிருக்கிறது. இதனால், மாதத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே தன்னுடைய பலசரக்குக் கடையைத் திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் புர்காராம்.

தனது கணவனின் விநோதமான தூக்கம், விசித்திரமான செயல்பாடுகளால் அதிச்சியடைந்த புர்காராமின் மனைவி, அவரை அழைத்துக்கொண்டு மருத்துமனைக்கு சென்றிருக்கிறார். இருவரும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமும் அதிச்சியும் அடைந்த டாகடர்கள் உடனடியாக புர்காராமுக்கு என்ன பிரச்சினை என்பதை அறிய முழுப் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில், அவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இவரை நவீன கும்பகர்ணன் என அங்கு உள்ளவர்கள் அழைக்கிறார்கள்.

அதாவது, `ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா’ என்பது ஒரு தூக்க நோய் ஆகும். தூக்கத்திலிருந்து எழ முயற்சி செய்தாலும், அவர்களின் உடல் ஒத்துழைக்காது. மேலும், அவர்கள் தூக்கம் வருவதற்கு முன்பாக, கடும் தலைவலியால் அவதிக்குள்ளாவர். இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புர்காராம் இப்படி நாள்கணக்கில் தூங்குவதெல்லாம் இந்த ஆண்டோ, சென்ற ஆண்டு நிகழ்ந்ததோ அல்ல. சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

சாப்பிட கூட மறந்து தூங்கும் கணவனுக்கு அவருடைய மனைவிதான் தூக்கத்திலேயே உணவு ஊட்டுகிறார். அவரின் குடும்பத்தினரும் பலசரக்குக் கடையைத் திறக்க முடியாமல், வருமானத்துக்கு வழியில்லாமல் திணறிவருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!