69-வது குடியரசு தினம் இன்று – முதன் முறையாக வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்..!


ஜனநாயகம் மலந்த இந்நாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள் என 69-வது குடியரசு தினத்தை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அரசியல் மற்றும் கலையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜனநாயகம் மலர்ந்த இந்நாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் சுதந்திர தின வாழ்த்துக்களோ அல்லது குடியரசு தின வாழ்த்துக்களோ தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!