5 மொழிகளில் சினிமா படமாக தயாராகும் ஜீவஜோதி வாழ்க்கை

ஜீவஜோதியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் சினிமா படமாக தயாராக உள்ளது.

ஜீவஜோதி மீது ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் ஆசைப்பட்டதும், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியதும் அதை தொடர்ந்து நடந்த வழக்குகள், கோர்ட்டில் குற்றவாளியாக ராஜகோபால் அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட உண்மை சம்பவங்களை வைத்து இந்த படம் தயாராக உள்ளது.

ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது. எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார். இப்படத்துக்கு திரைக்கதை ஆசிரியராக பவானி அய்யர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!