மிரட்டும் கண்களால் வைரலாகும் புகைப்படம் -20 அடி கிணறுக்குள் விழுந்த சிறுத்தைப் புலி!

புகைப்படத்தை பார்க்கும் போது சிறுத்தைப் புலி உயிருக்கு பயந்திருப்பது போல அல்ல. அதன் பார்வை நமக்கு பயத்தை கொடுக்கிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியின் புறநகர் பகுதியில் உலா வந்த சிறுத்தைப் புலி ஒன்று அங்குள்ள 20 அடி கிணற்றில் விழுந்துவிட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப் புலியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்க்கும் போது சிறுத்தைப் புலி உயிருக்கு பயந்திருப்பது போல அல்ல. அதன் பார்வை நமக்கு பயத்தை கொடுக்கிறது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை 8000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவகள் இதனை ரீட்விட் செய்துள்ளனர். புறநகர் பகுதிகளில், உபயோகமின்றி இருக்கும் கிணறுகளை எல்லாம் மூட வேண்டும் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!