நடிகை காஜல் பசுபதிக்கு திடீரென 2ஆவது திருமணம்..!

கொரோனா காலத்தில் ஏராளமான திருமணங்கள் சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. பெரிய பிரபலங்களின் திருமணங்களும் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் நடைபெறுகிறது. அவை தொடர்பான புகைப்படம் வெளியான பின்னரே இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்ற ஆச்சரியம் மக்களுக்கு ஏற்படுகிறது.

தற்போது அப்படியோரு நடிகைக்கு திருமணம் நடக்கஇருக்கிறது. கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ், கலகலப்பு 2 திரைப்படங்களில் நடித்தவர் காஜல் பசுபதி. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் காஜல் பசுபதி எப்போதும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் காஜல் பசுபதி ட்விட்டரில் தனக்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக பதிவிட்டு உள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்நத நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.. அடுத்த வாரம் திருமணம்.. கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க.. என அவர் கூறி உள்ளார்.

வாழ்த்துக்கள் ஒருபுறம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நெட்டிசன்களை prank செய்ய தான் இப்படி செய்து வருகிறார் எனவும் சிலர் கூறி வருகின்றனர். உண்மையிலேயே அவருக்கு திருமணம் நடைபெறப்போகிறதா என்பதை புகைப்படம் வந்தால் தான் உறுதிப்படுத்த முடியும்.

காஜல் பசுபதி டான்ஸ் மாஸ்டர் சாண்டியை திருமணம் செய்துகொண்டு, அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர். சாண்டி மாஸ்டர் தற்போது சில்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சாண்டி குடும்பத்துடன் காஜல் பசுபதி நெருக்கமாக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: newstm * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!