கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகை!

மும்பையை சேர்ந்தவரான நடிகை ஃபிரீடா பின்டோ, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம், நடிகையாகி பிரபலமானவர் ஃபிரீடா பின்டோ. மும்பையை சேர்ந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை ஃபிரீடா பின்டோ, புகைப்படக் கலைஞர் கோரி ட்ரான் என்பவரை காதலித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், தனது காதலர் கோரியின் பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகை ஃபிரீடா. தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக குறிப்பிட்டு, புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஃபிரீடா. இதைப் பார்த்த ரசிகர்கள், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!