தமிழில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்..!

சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், கீர்த்தி சுரேஷ் போன்ற வாரிசு நடிகைகளின் வரிசையில் மேலும் ஒரு நடிகையும் தற்போது அறிமுகமாகி உள்ளார்.

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர்.

இந்த வரிசையில் 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகாவும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

அவர் தனது முதல் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஆர்.கார்த்திக் இயக்குகிறார். காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரீத்துவர்மா ஆகிய மேலும் 2 கதாநாயகிகளும் நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!