சாம்சங்-ஐ பின்தள்ளிய சியோமி ஸ்மார்ட்போன்…!


இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டின் இறுதி காலாண்டு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

2017 நான்காவது காலாண்டு நிலவரப்படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்துள்ளது.

முந்தைய காலாண்டை விட 17% வளர்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், சாம்சங் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனையை பொருத்த வரை சாம்சங் 73 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்த நிலையில், சியோமி நிறுவனம் 82 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது.

கனாலிஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின் படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6% அதிகரித்திருக்கிறது. விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கின்றன. இதில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மட்டும் 50% பங்குகளை பெற்றிருக்கின்றன.

சியோமி நிறுவனம் மட்டும் 27% மற்றும் சாம்சங் நிறுவனம் 25% பங்குகளை பெற்றிருக்கின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் அதிக கவனம் செலுத்தாததே சாம்சங் விற்பனை நிலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மறுபக்கம் சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது நிறுவனமாக இருந்து தற்சமயம் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

சியோமி போன்றே விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களும் 40% பங்குகளை பெற்றிருக்கின்றன. முந்தை காலாண்டில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் 23.3% பங்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!