குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை…!


குளோனிங் என்பது சொமாட்டிக் செல் நியூக்ளியர் டிரான்ஸ்பர் என்ற முறை மூலம் செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

அதே போன்று இரண்டு குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். உயர் விலங்குகள் வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் உயிரினம் இதுவாகும். அதாவது பாலூட்டிகளில் கை, கால்கள் மற்றும் மனிதர்களை போன்று முன்னோக்கிய கண்கள் கொண்ட அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.

சாங் சாங் மற்றும் ஹீயா ஹீயா என்ற அந்த குரங்குகள் 6 வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்டன. இது குளோனிங் முறையில் ஏற்பட்ட வளர்ச்சி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவது மிகவும் கடினமான காரியம். ஆனால், குரங்குகள் உருவாக்கப்பட்டது அதற்கான தொடக்கம். இந்த கண்டுபிடிப்பு சீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்பட்ட முன்னேற்றம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!