அடுத்த ஆப்பு ஜி.பி.முத்துவுக்கு ரெடி.! காவல் நிலையத்தில் புகார்.!

யூட்யூபில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாசமாக பேசி வீடியோ போடுவதாக ஜி.பி.முத்து, ரவுடி சூர்யா பேபி உட்பட நான்கு நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

பப்ஜி மதன் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தமிழக காவல்துறைக்கு தண்ணி காட்டியவர் இவர் யூ டியூபில் பப்ஜி ஆடும் சிறார்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், பெண்களை தரக்குறைவாக இழிவுப்படுத்தி பேசியதாகவும் புகார் எழுந்தது அதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார்கள் கொடுக்கப்பட்டு தற்பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறையில் தங்களுடைய நாட்களை கழித்து வருகின்றனர். இந்நிலையில் ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்ட நபர்களின் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்.எம்.கே.முஹைதீன் இப்ராஹிம் என்பவர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில் சமீபகாலமாக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கா என்கின்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் இதனை லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர் இவர்கள் உடல் பாவனைகளும் பேச்சுகளும் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது.. குறிப்பாக இதை காணும் சிறுவர் சிறுமிகளின் மனதை பாதிப்படையச் செய்யும் வகையில் இவர்களின் ஆபாச பதிவுகள் உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணைய தளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.- source: 1news * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!