உலகப் புகழ்பெற்ற ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கியவருக்கு நடந்த கதி!

உலகப் புகழ்பெற்ற ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் மெக்காபி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

உலகப் புகழ்பெற்ற ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் மெக்காபி, ஸ்பெயின் சிறையில் தற்கொலை செய்து கொண்டதை அவரது வழக்கறிஞர் உறுதிசெய்துள்ளார்.

வர்த்தக அடிப்படையில் உலகின் முதல் ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மெக்காபி, அதை இன்டல் நிறுவனத்திற்கு 2011ஆம் ஆண்டில் விற்றுவிட்டார். கிண்டலடிக்கும் கிறுக்குத்தனமான வீடியோக்களாலும் பிரபலமானவர் ஜான்மெக்காபி.

கொள்கை காரணமாக, தான் 8 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என 2019-ல் கூறிய மெக்காபி, வழக்கு விசாரணையை தவிர்க்க அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

கிரிப்டோகரன்சி மோசடி வழக்கும் இருந்த நிலையில், பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில், பார்சிலோனா சிறையில் ஜான் மெக்காபி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். காரணம் இல்லாமல் நீண்ட நாள் சிறையில் அடைக்கும் கொடூரமான சிஸ்டமே இதற்குக் காரணம் என்றும் மெக்காஃபியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

3 நாட்களுக்கு முன் மெக்காபி மனைவி ஜானிஸ் இது குறித்து எச்சரித்து இருந்தார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!