24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த நுண்ணுயிர் உயிருடன் கண்டுபிடிப்பு..!

குளிர்ந்த இடத்தில் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த நுண்ணுயிர் உயிரோடு இருப்பதுடன், இனப்பெருக்கம் செய்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த மிகவும் நுண்ணிய பல்லுயிர் உயிரினம் பெலாய்ட் ரோட்டிஃபெர். இந்த நுண்ணுயிர் தூய்மைான நீரில் வாழ்வும் தன்மையுடையது. உலகின் எல்லா இடங்களிலும் மிகவும் அதிகமான குளரிலும் வாழும் தன்மை கொண்டது. -20 டிகிரி குளிரிலும் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என இதற்கு முன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஷிய ஆராய்ச்சியாளர்கள் ரஷியா பிராந்தியத்தில் உள்ள யகுடியாவில் உள்ள அலஜெயா ஆற்றில் உள்ள மணலை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். அப்போது 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த பெலாய்ட் ரோட்டிஃபெர் நுண்ணுயிரை கண்டுபிடித்துள்ளனர். தற்போது அது உயிருடன் இருப்பதுடன், இனப்பெருக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் அதிகமான ஆண்டுகள் மண்ணில் புதையுண்டு, அதன்பின் உயிர்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெலாய்ட் ரோட்டிஃபெர்-தான் எனத் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!