தமிழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் விஜயேந்திரர் – வைகோ கண்டனம்…!


தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட அவமானம் என வைகோ கூறினார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி இன்று மூலகொத்தளத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி தங்களது உயிரை தீக்கிரையாக்கினார்கள். தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது.


இந்தி பேசாத மாநிலங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதன் எதிரொலியாக தான் தமிழகத்தில் மரபுகளை உடைத்து கவர்னர் ஆய்வுகள் செய்து வருகிறார்.

இதை தட்டி கேட்க தமிழக அரசுக்கு முதுகெலும்பு இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட அவமானம்.

இதற்கு வருத்தம் தெரிவித்து இருப்பது ஏற்கக் கூடியதல்ல. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH