செல்ல மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விமல்… குவியும் வாழ்த்துகள்!

பசங்க, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமலின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


பசங்க, களவாணி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விமல். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூட வா, உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக கன்னிராசி திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், மகளின் புகைப்படம் மற்றும் மனைவி மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!