என் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம் தான்… உதயநிதி அதிரடி..!


திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளேன் என நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

படத்தில் நடிப்பதற்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளராகவும் பல படங்களைத் தயாரித்துள்ளார்.

நடிக்க வந்த போது காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார்.

இதையடுத்து தற்போது பல்வேறு விதமான வித்தியாச கதாபாத்திரங்களையும், கதை களங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘மனிதன்’ திரைப்படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள புதிய படமான ‘நிமிர்’ விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இணையதள சேனலுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் தான் அரசியலுக்க வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சினிமாவுக்கு முக்கித்துவம் கொடுத்து வந்ததால் தான் அரசியலில் விலகி இருந்தேன். நான் பிறந்ததில் இருந்து அரசியலில் தான் இருக்கிறேன். என் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம் தான்.

அரசியல் காரணமாக என படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்படாமல் பழிவாங்கப்பட்டுள்ளேன்.

பல முறை அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டுக்கேட்டுள்ளேன். தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். எனவே நானும் வருவதற்கு நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.-Source: tamil.eenaduindia

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH