கொரோனா தடுப்பூசி போட்டுக்க போறீங்களா? இந்த எஸ்எம்எஸ்-ஐ நம்பாதீங்க

கோவின் செயலியை இன்ஸ்டால் செய்யக் கோரி உங்களுக்கு வரும் குறுந்தகவலை நம்ப வேண்டாம்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் பெரும்பாலான அன்றாட பணிகள் டிஜிட்டல் மயமாகி இருக்கின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளன.

இந்த நிலையில், ஆன்லைன் சார்ந்த ஊழல் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் தளத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொண்டதை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏமாற்றி பணம் பறிக்க துவங்கிவிட்டனர்.

தற்போது கொரோனாவைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள கோவின்ஹெல்ப் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என கூறும் தகவல் வலம் வருகிறது. இந்த தகவலுடன் செயலியை இன்ஸ்டால் செய்யக்கோரும் இணைய முகவரி ஒன்று எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

வைரல் தகவலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரி அரசு அங்கீகரித்தது இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்த செயலியில் முன்பதிவு செய்ய வேண்டாம். மத்திய அரசின் கோவின் தளத்துக்கான இணைய முகவரி : https://www.cowin.gov.in/. எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் இணைய முகவரி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்ல.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!