உடல் எடை கூடி மாறிப்போன தனுஷ், சிம்பு பட நடிகை… வைரலாகும் புகைப்படம்!

தமிழில் தனுஷ், சிம்பு படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா கங்கோபாத்யாய் திருமணமானதும் உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர். தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் ரிச்சா மிகவும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!