சவூதியில் 12 ஒட்டகங்கள் அழகு போட்டியிலிருந்து வெளியேற்றம்.. ஏன் தெரியுமா..?


சவூதி அரேபியாவில் ஆண்டுதோறும் மன்னர் அப்துலாஸ் ஒட்டக திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த பாரம்பரிய திருவிழாவில் ஒட்டக அழகுப்போட்டி நடைபெறும். இதில் ஏராளமான ஒட்டகங்கள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் போட்டியில் 12 ஒட்டகங்கள் பங்குபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டகங்களுக்கு அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இது போட்டி விதிமுறைகளை மீறிய செயலாகும்.


ஓட்டப்பந்தயம், ஒழுக்கம், ஒட்டகத்தின் முடி அலங்காரம் மற்றும் ஒட்டகங்களின் புகைப்படங்கள் போன்ற போட்டியில் வெற்றி பெறும் ஒட்டகத்திற்கு 57 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இத்தொகையை பெற ஒட்டக உரிமையாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.-Source: maalaimalar

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05