துணையுடன் சண்டையா? சமாதானம் செய்வது எப்படி?

மனோதத்துவ ரீதியாக சொல்வதென்றால் சண்டை ஏற்படாத உறவுகள் குறைவாகவே இருக்கும், இரு உறவுகளுக்குள் நல்ல புரிதல் உருவாக சில சண்டைகள் அவசியமாகக்கூட இருக்கலாம்.


வீட்டிற்கு வீடு வாசற்படி என்ற சொல்வழக்கு கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இடையே உருவாகும் கருத்து வேறுபாடுகள் காரணமாக வாக்குவாதம் அல்லது சண்டைகள் ஏற்படக்கூடும். அவற்றை எவ்வாறு தவிர்ப்பது அல்லது கையாள்வது என்பதற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.

மனோதத்துவ ரீதியாக சொல்வதென்றால் சண்டை ஏற்படாத உறவுகள் குறைவாகவே இருக்கும், இரு உறவுகளுக்குள் நல்ல புரிதல் உருவாக சில சண்டைகள் அவசியமாகக்கூட இருக்கலாம். இருப்பினும் தொடர்ச்சியான சண்டை என்பது உறவை பாதிப்பதாக அமையக்கூடும். அதனால் சண்டைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதே உறவுகளுக்கு மத்தியில் இனிமையை அளிக்கும்.

கருத்துக்களை நிதானமாக வெளிப்புடுத்துங்கள்

தவிர்க்க இயலாத சூழலில் சண்டை ஏற்பட்டு விட்டாலும் கூடி அது முடிந்த பின்னர் ஒருவர் சமாதான நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். எல்லா தவறுகளுக்கும் ஒருவரே காரணம் என்ற அளவில் அது இருக்கக்கூடாது. வாக்குவாதம் அல்லது சண்டைக்கு அடிப்படையான காரணம் மற்றும் உணர்வுகள் பாதிக்கப்பட்ட விதம் குறித்த இரு தரப்பு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இணையின் எண்ணங்களை கேளுங்கள்

சண்டை என்ற விஷயத்திற்கு இரு பக்கம் உள்ளது என்ற அடிப்படையில் இணையின் கருத்துக்களை எவ்வித குறுக்கீடும் செய்யாமல் பொறுமையாக காது கொடுத்து கேளுங்கள். அது உணர்வுகளை தூண்டுவதாக இருந்தாலும். அமைதியாக கேட்பதன் மூலம் சமாதானம் ஏற்பட வழி பிறக்கும்.

தூண்டுதலுக்கான காரணத்தை கண்டறியுங்கள்

மனதில் எழுந்த கோபம் காரணமாக இணையின் மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்பிட்ட விஷயங்களை பேசுவது அல்லது செய்வது ஆகியவற்றை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்.

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்

உணர்ச்சிப்பூர்வமான வாக்குவாதத்தில் இணையில் மனதை காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்துவது பொதுவான விஷயம் தான். அது முழு உணர்வு இல்லாத மனநிலையில் பேசப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் இணையின் மனம் அதனால் புண்பட்டிருக்கக்கூடும். அதனால் தப்பா சொல்லிட்டேன். மன்னிச்சுடு என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

மனம் விட்டு உரையாடுங்கள்

வாக்குவாதம் அல்லது சண்டையின் போது பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்துவது பொதுவான விஷயம். அதன் பின்னர் இருவரும் சமாதானத்தை குறிக்கோளாக கொண்டு மனம் விட்டு பேசுங்கள். எது பிடிக்காமல் போனது, ஏன் சண்டை நடந்தது. சண்டை வளர என்ன காரணம் இனி சண்டை வராமலிருக்க என்ன செய்யலாம் போன்ற விஷங்களை விவாதியுங்கள்.

ரிலாக்ஸ் அவசியம்

சண்டை குறித்த விவாதங்கள் முடிந்த பின்னர் சூழலை மகிழ்ச்சியாக மாற்றுவது அவசியம். இருவருக்கும் பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம். வெளியே சென்று வரலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!