இவங்களை பிடித்து அடிக்க வேண்டும்! ஆவேசத்தில் சூப்பர் ஹீரோ சக்திமான்!

90 களில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த முகேஷ் கண்ணா, கொரோனாவால் இறந்துவிட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து, அவரே விளக்கம் அளித்துள்ளார்.


90 களில் சூப்பர் ஹீரோவாக இருந்தவர் சக்திமான். இந்த தொடரை தயாரித்து நடித்து வந்தவர், பிரபல நடிகர் முகேஷ் கண்ணா. 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பானது.

இந்நிலையில் இந்தியாவில் பல பிரபலங்களை பாரபச்சம் இல்லாமல் தாக்கி, சிலரது உயிரை பலி வாங்கி வரும், கொரோனா தொற்றுக்கு, நடிகர் முகேஷ் கண்ணா ஆளாகி, இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் யாரோ கொளுத்தி போட அந்த வதந்தி பாலிவுட், திரையுலகினர் மத்தியில் பரபரப்பானது.

இந்த வதந்தி குறித்து அறிந்த முகேஷ் கண்ணா, உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், ‘தான் நல்ல உடல்நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதாகவும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டு கொண்டார். மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!