செவிலியர் காலில் விழுந்து நன்றி தெரிவித்த டீன்..!

தற்போது உலகம் முழுவதும் கோடிக்கனக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு செவிலியர்கள் சுயநலமின்றி தியாகத்துடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த பி்ளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் போர்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். அவரின் தியாகத்தை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12-ந் தேதி சர்வதேச செவிலியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் கோடிக்கனக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு செவிலியர்கள் சுயநலமின்றி தியாகத்துடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் நேற்று செவிலியர் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது டீன் ரவீந்திரன், திடீரென்று கொரோனா சிகிச்சைப்பிரிவில் பணி்புரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் விட்டார். இது உருக்கமான நிகழ்ச்சியாக மாறியது. இது அங்கு கூடியிருந்த செவிலியர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. பின்னர் அவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியும், கேக் வெட்டியும் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!