கமலின் அபூர்வ சகோதரர்கள் பட நடிகர் மரணம்..!

தமிழில் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் மலையாளத்தில் த்ரிஷ்யம் படங்களில் நடித்த பிரபல நடிகர் மேலா ரகு காலமானார்.

கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இதில் கமல் உயரம் குறைந்த நடிகராக நடித்திருப்பார். இந்த படத்தில் உயரம் குறைந்த நடிகர்கள் சிலர் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் மேலா ரகு.

60 வயதாகும் மேலா ரகு காலமானார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு உடனே கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் மோகன்லாலுடன் த்ரிஷ்யம், மேலா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!