இளம் நடிகர் கவலைக்கிடம்… மனைவி உருக்கமான பதிவு..!

இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் இளம் நடிகர் அனிருத் தாவே.

இவர் நடிகை சுபி அஹுஜாவை 2015-ல் திருமணம் செய்து கொண்டார். இரு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அனிருத் தாவேவுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் சமீபத்தில் போபாலில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் பங்கேற்றார். அந்த படப்பிடிப்பில் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மும்பையில் உள்ள வீட்டுக்கு செல்லாமல் போபாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனிருத் தாவே அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனிருத் தாவே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மனைவி சுபி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது வாழ்க்கையின் கஷ்டமான தருணம் இது. அனிருத்துக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!