பணம் கேட்டு மிரட்டுறாங்க… ரைசா மீது டாக்டர் பைரவி பரபரப்பு புகார்!

பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட பிரபலமான மாடல் ரைசா வில்சனுக்கு படம் வாய்ப்புகள் பல கிடைத்தது. அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் ஹிட்டடித்தது. இதையடுத்து, அவர் தற்போது காதலிக்க யாருமில்லை, தி சேஸ் உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ரைசா தோல் மருத்துவர் பைரவி மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

தோல் மருத்துவர் பைரவி, தான் கேட்காத சிகிச்சை ஒன்றை அளித்ததால் தன் முகம் வீங்கிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார் ரைசா. அதுமட்டுமில்லாமல், அந்த மருத்துவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் வெளியூர் சென்று விட்டதாகவும் தன்னிடம் பேச மறுத்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது.

இது குறித்து விளக்கம் அளித்த டாக்டர் பைரவி செந்தில், நடிகை ரைசாவுக்கு அந்த சிகிச்சையை ஏற்கனவே ஒரு முறை அளித்திருக்கிறேன். dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும். ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார். டாக்டர் பைரவி சொன்ன இந்த குற்றச்சாட்டுக்கு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விளக்கமளிக்க முடியாது என ரைசா சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: top.tamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!