கர்ப்ப காலத்தில் மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்பட்டால் ஆபத்தா..?


கர்ப்பக் காலத்தில் மூக்கில் ரத்த ஒழுக்கு ஏற்படுவது மிகவும் சாதாரணம். பொதுவாகக் குறைந்த அளவிலும், சில வேளைகளில் மிகவும் அதிகமாகவும் ஏற்படுவது உண்டு. நீண்ட நேரத்துக்கு அதிக ரத்தம் வெளியேறவிடாதீர்கள்.

இதைப்பற்றி கவலைப்படுவதற்கும் ஒன்றும் இல்லை மூக்கை வேகமாகச் சிந்தாமல், மெதுவாகச் சிந்துங்கள் தும்மல்களை அடக்க முயற்சி செய்யுங்கள்.

ரத்தப்போக்கை நிறுத்துவதற்கு மூக்கை அழுத்திப் பிடியுங்கள் ரத்தப் போக்கு உடனே நின்றுவிடும். நோய்த்தொற்று போன்றவை இருக்கும் என சந்தேகப்பட்டால், காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி, நீங்கள் கர்ப்பமாக இருக்கும் விவரத்தைக் கூறி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுங்கள்.

சின்னச் சின்ன பொருள்களைக் கடித்துச் சாப்பிட்டாலும் என் ஈறுகளில் ரத்த ஒழுக்கு ஏற்படுகிறது. ஈறுகள் வீங்கிவிடுகின்றன. எதையும் சாப்பிட முடியவில்லை. இதைத் தடுக்க என்ன செய்யலாம்?


நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலும், இல்லாமல் போனாலும், ஈறுகளில் ரத்த ஒழுக்கு ஏற்படுவதற்குக் காரணம், பற்களின் மீது பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் கறைகளே ஆகும். இது ஈறுகளை அழற்சிக்கு உள்ளாக்குகிறது.

தவிர, கர்ப்பக் காலத்தில் ஈறுகள் மென்மையானவையாக மாறும். கடினமான உணவுப் பொருள்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்துவிடும். நோய்த் தொற்றையும் உண்டாக்கும்.

கர்ப்பக் காலத்தின்போது, உங்களுடைய பற்களைச் சுத்தப்படுவதற்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். படுக்கப்போவதற்கு முன்பும், அதிகாலையில் எழுந்த பிறகு காலை உணவு உண்பதற்கு முன்புமாக ஒரு நாளைக்கு இருவேளையாவது பல் துலக்குங்கள், பற்களை நன்றாகத் தேய்த்து எல்லா கறைகளும் நீங்குமாறு துலக்குங்கள். மிருதுவான பல் துலக்கியைப் பயன்படுத்துங்கள்.

கர்ப்பக் காலத்தின் பற்களையும், ஈறுகளையும் பாதுகாப்பது மிக முக்கியமானது.-Source: tamil.eenaduindia

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05