அதிகமாக தாய்ப்பால் சுரக்க… வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.!

நம்முடைய தினசரி உணவில் வெந்தயத்துக்கு முக்கிய இடம் உண்டு. உணவுக்கு சுவை மற்றும் மனம் அளிப்பதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு ஆரோக்கிய பலன்களையும் வெந்தயம் நமக்கு அளிக்கிறது. வெந்தய விதை மட்டுமின்றி அதன் கீரை கூட பல்வேறு மருத்துவ பலன்களைக் கொண்டது.

வெந்தயத்தில் அதிக அளவில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தின் போது உணவு செரிக்கப்படுவதால் ரத்தத்தில் கலக்கப்படும் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரையில் திடீரென்று சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. செல்கள் குளுக்கோஸை கிரகிக்கத் தூண்டுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்பதால் டைப் 1, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.


பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். சில தாய்மார்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு இருப்பது இல்லை. அவர்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்ய வெந்தயத்தை எடுத்துக்கொள்ளலாம். 77 புதுத் தாய்மார்களுக்கு வெந்தயம் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பால் அதிக அளவில் அவர்களுக்கு சுரந்தது உறுதியானது. இதன் மூலம் அவர்களின் குழந்தைகள் எடை அதிகரித்துள்ளது.

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரன் அளவை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு. 30 இளைஞர்களுக்கு தினமும் வெந்தயம் கொடுத்து நான்கு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு உடலின் கொழுப்பு 2 சதவிகிதம் அளவுக்குக் குறைந்திருப்பதுடன், டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரித்திருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் 30 இளைஞர்களுக்கு கூடுதல் அளவு வெந்தயம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களின் பாலியல் செயல்திறன் மேம்பட்டிருப்பதும் உறுதியாகி உள்ளது.

இது தவிரப் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும். நெஞ்சு எரிச்சலைக் குறைக்கும், செரிமானத் திறனை மேம்படுத்தும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் வெந்தயத்தை எடுத்துக்கொண்டால் அதீத வலி கட்டுப்படும். மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு அதற்கான அறிகுறிகள் தென்படும்போது வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் எடுத்துக் கொள்ளவதன் மூலம் மாதவிலக்கு கால வலி குறையும்.- source: top.tamil * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!