உங்க கூந்தல் எப்படிப்பட்டது..? இப்படி பராமரிப்பு செய்யுங்க..!

இன்றைய காலகட்டத்தில் கூந்தல் உதிர்வு பிச்சனை ஆண், பெண் இருவரையும் பாடாய் படுத்துகிறது. அந்த வகையில் இன்று எந்த வகையான கூந்தலுக்கு என்ன பராமரிப்பு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை கூந்தலை அலசி, கண்டிஷனர் உபயோகியுங்கள்.

வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருவேளை முழுமையான உணவாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

எண்ணெய்ப் பசையான கூந்தல்

வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள்.
மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூவுடன் சேர்ந்த கண்டிஷனரை தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள்.

வறண்ட கூந்தல்

லேசாக சூடுசெய்த எண்ணெயால் கூந்தலை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிய பிறகே கூந்தலை அலசவும். அப்படி ஆயில் மசாஜ் செய்யும்போது சீப்பால் கூந்தலை நுனிவரை வாரிவிடவும். உடைந்த நுனிகளுக்கு இது ஊட்டம் தரும்.
சாதாரண கண்டிஷனர் தவிர்த்து இன்டென்சிவ் கண்டிஷனர் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.
துத்தநாகச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!