இளம்பெண்ணின் குளியலறைக்கு பின்புறம் மறைந்திருந்த மர்மம்..!

நியூயார்க்கில் இளம்பெண் ஒருவர் தனது குளியலறைக்கு பின்புறம் மறைந்திருந்த மர்மத்தை கண்டுபிடுத்துள்ளார்.

நியூயார்க்கில் சமந்தா ஹார்ட்ஸ்டோ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது குளியல் அறைக்கு சென்றபோது அங்கிருந்து குளிர்ந்த காற்று வீசுவதை உணர்ந்துள்ளார். ஆனால் குளியலறையில் ஜன்னலே இல்லாத பொழுது குளிர்ந்த காற்று வீசுவது எப்படி என்பதை கண்டறிய வேண்டுமென்று நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து அவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார்.

பின்னர் சமந்தா ஹார்ட்ஸ்டோ குளியல் அறையில் மாட்டி இருந்த கண்ணாடியை அகற்றிய போது அதற்கு பின்னால் ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவிற்கான துவாரம் இருந்துள்ளது. நண்பர்கள் உடன் இருக்க சமந்தா ஹார்ட்ஸ்டோ துவாரம் வழியே உள்ளே சென்று பார்த்த போது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம் ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்றால் , கண்ணாடிக்கு பின் இன்னொரு வீடு இருந்திருக்கிறது.

அந்த வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் 2 குளியலறைகள் இருந்துள்ளது. தனது குளியல் அறைக்கு பின்னால் மற்றொரு வீடு இருப்பதை நம்ப முடியாமல் சமந்தா ஹாட்ஸ்டோ திகைத்து பார்த்து உள்ளார். மேலும் அங்கு யாரோ பயன்படுத்திவிட்டு வைத்து போன தண்ணீர் பாட்டிலும் இருந்துள்ளது. இதனால் தினமும் அங்கு யாரோ வந்து செல்கிறார் என்பதை அறிந்த சமந்தா இதுபற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதை ட்விட்டரில் பதிவிட்டு இந்த வீட்டின் உரிமையாளரை சந்தித்து பேசவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த ஒருவர், அமைதியாக இரு உனக்கு ஒரு வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடு கிடைத்துள்ளது அதை பயனுள்ளதாக மாற்றிக்கொள் என்று கூறியிருக்கிறார்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!