இந்த பொருளுக்கு இத்தனை மவுசா..? அதிர்ஷ்டம்னா அது இது தான்..!

தாய்லாந்தில் பெண் ஒருவருக்கு கடற்கரையில் அதிக விலைமதிப்புடைய பொருள் கிடைத்துள்ளதால் நிபுணர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.

கடந்த 23ஆம் தேதியன்று தாய்லாந்தில் உள்ள Nakhon Si Thammarat என்ற மாகாணத்தில் உள்ள கடற்கரைக்கு Siriporn Niamrin என்ற 49 வயதுடைய பெண் நடந்து சென்றிருக்கிறார். அப்போது கடலோரத்தில் வெள்ளை நிறத்திலான பெரிய பொருளொன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. அதில் இருந்து ஒரு வாசனை வந்துள்ளது.

இதனால் Siriporn அதன் அருகில் சென்று அதனை இழுத்து வந்துள்ளார். இதுகுறித்து தன் அக்கம் பக்கத்தினரிடம் கேட்டுள்ளார். அவர்கள் இது Ambergris. அதாவது திமிங்கலத்தின் வாந்தி என்று கூறியுள்ளார்கள். மேலும் இது 24 அங்குலம் நீளமும், 12 அங்குலம் அகலமும், 6.8 கிலோ எடையும் இருந்துள்ளது.

மேலும் இது உண்மையாகவே Ambergris ஆக இருக்கும் பட்சத்தில், இதன் மதிப்பு 1,86,500 பவுண்டுகள் ஆகும். அதாவது 3,59,83,998 கோடி ரூபாய் ஆகும். எனவே இது Ambergris தானா? பரிசோதிக்க சோதிக்க Siriporn மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் இணைந்து உருக வைத்துள்ளனர். அது உருகிய பின் மீண்டும் கடினமாக மாறியுள்ளது. மேலும் வாசனையும் அதில் இருந்து வந்துள்ளது.

Ambergris, வாசனை திரவிய தொழிலில் உபயோகப்படுத்தப்படும் அரியவகை பொருளாகும். எனவே இது அது தானா? என உறுதி செய்வதற்காக நிபுணர்கள், Siriporn வீட்டிற்கு செல்லவிருக்கின்றனர். இதுகுறித்து Siriporn கூறியுள்ளதாவது, இது எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மேலும் இந்த பொருள் எனக்கு பணத்தை அளிக்கும் என்றும் நம்புகிறேன்.இதனால் தன் வீட்டில் இதனை பாதுகாப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!