கடலில் மிதக்கும் சடலங்கள்…. இத்தாலியில் கல்லறையால் ஏற்பட்ட அவலம்


இத்தாலியில் கல்லறை ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழுந்ததில் சவப்பெட்டிகள் திறந்து சடலங்கள் கடலில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள Genoaவிற்கு அருகில் இருக்கும் Camogli இலுள்ள குன்றில் கல்லறை ஒன்று உள்ளது திடீரென இங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தக் கல்லறை மொத்தமாக இடிந்து விழுந்து அதிலிருந்து சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியது. மேலும் இந்த சவப்பெட்டிகள் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருந்து கீழிருக்கும் பாறைகளில் சவப்பெட்டிகள் விழுந்ததால் சேதமடைந்து திறந்தபடி சடலங்கள் வெளியில் தெரிவதாக கூறப்பட்டுள்ளது.

இத்தகவலை அறிந்த உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மேலும் சவப்பெட்டியுடன் தங்கள் உறவினர்களின் புதைக்கப்பட்ட உடல்கள் கிடைக்குமா? என்ற வருத்தத்தில் உள்ளனர். இதுகுறித்து ஜியான்கர்லோ மோரேச்சி என்ற நபர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து விளக்கமளிப்பது மிக கடினமான ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் இவர் 8 சவப் பெட்டிகள் மற்றும் கடலில் மிதந்து கொண்டிருந்த இரண்டு சடலங்களையும் கரைக்கு கொண்டு வருவதற்காக உதவியிருக்கிறார்.

இதனையடுத்து இவர் கொண்டு வந்த ஒரு சடலத்தில் உடை இன்றும் அப்படியே இருந்ததால் அதனை எளிதாக அடையாளம் காண முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உள்ளூரில் வசிக்கும் பமீலா அலோசியோ என்ற பெண் கூறியுள்ளதாவது, “என் தந்தை 150 வருடங்கள் பழைமை வாய்ந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

தற்போது இச்செய்தியை அறிந்தவுடன் மிக வேதனை அடைந்தேன், எனது கால்கள் நடுங்குகிறது அவர் மீண்டும் உயிரிழந்ததை போன்ற வேதனையை அடைகிறேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உள்ளூர் மேயரான பிரான்சிஸ்கோ ஒலிவாரி கூறியதாவது, “சடலங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!