கண்ணீர் விட்ட இந்திய வம்சவாளி பெண்… கண்டு கொள்ளாத பிரிட்டன்..!!


பிரிட்டனின் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் மகனைத் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியா வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரேன் என்ற தம்பதியரின் மகனான எட்டு வயது தேவ் நரேன் தனது தாத்தாவுடன் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கார் பழுதடைந்ததால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது வேகமாக வந்த டிரக் ஒன்று காரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவ் உயிரிழந்தான். அந்த ஸ்மார்ட் சாலையில் கூட்ட நெரிசலுக்கேற்றார் போல் பயன்பாட்டுக்கு விடப்படும். அந்த வழிச்சாலையில் அவசர தேவைக்காக கார்களை நிறுத்திக்கொள்ளலாம். அதேமாதிரிதான் கார் பழுதடைந்ததால் தாத்தா காரை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென ஒரு ட்ரக் வந்து மோதியதில் தேவ் அநியாயமாக உயிரிழந்தான்.

ஏற்கனவே இந்த பர்மிங்ஹாம் நெடுஞ்சாலையில் 44 வயதான ஜேசன் மெர்க்கர், 36 வயதுடைய அஹமத், 83 வயதான டெரெக் ஜேக்கப்ஸ் ஆகியோர் இதே போன்று ஸ்மார்ட் சாலையில் விபத்துக்குள்ளாகி உள்ளார்கள். அதனால் அவர்களின் உறவினர்கள் இனைந்து உருவாக்கிய புரோக்கன் ஹார்ட்ஸ் என்ற வாட்ஸப் குழுவின் உறுப்பினர்கள் இந்த ஸ்மார்ட் நெடுஞ்சாலைக்கு தடை விதிக்குமாறு பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலையில் பழுதாகும் வாகனங்களுக்கான பாதுகாப்பு கருதி சில இடத்தை ஒதுக்கி தருவது குறித்து நெடுஞ்சாலை செயலரான கிராண்ட் ஷாப்ப்ஸ்ம் ஆலோசனை கூறினார்.

இத்தனை உயிரிழப்புக்கு பின்னரும் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையையும் மீறி ஒரு M6 நெடுஞ்சாலையின் 10 மைல் தொலைவை ஸ்மார்ட் நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த வசதியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக விபத்துக்கள் நேரிடும் என்று கணிக்கப்பட்ட போதிலும் நெடுஞ்சாலைத்துறை ஸ்மார்ட் சாலையை உருவாக்கியே தீருவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!