கல்யாணத்திற்கு மறுத்த 17 வயது சிறுமி! இளைஞன் பகீர் வாக்குமூலம்..!


தில்லியின் ரோகிணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நீது என அடையாளம் காணப்பட்ட 17 வயது சிறுமி, 25 வயது லைக் கான் என்பவரின் திருமண வற்புறுத்தலை ஏற்க மறுத்ததை அடுத்து, அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, நீதுவின் உறவினர் கவுசல் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5 மணிக்கு பேகம்பூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கான் தனது வீட்டிற்கு வந்திருப்பதைக் கண்டார். அவர் அடுத்த ஒரு மணி நேரம் மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் மாலை 6 மணியளவில், லைக் கான் கவுசலிடம் சென்று சிக்கன் வாங்கி வர பணம் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளார்.

இரவு 7.45 மணியளவில், கவுசல், திரும்ப வந்ததும் லைக் கான் ரத்தக் கறை படிந்த, சுத்தியல் வைத்திருப்பதைக் கண்டார். கவுசல் அவரைத் தடுக்க முயன்றார். ஆனால் லைக் கான் கதவை அடைத்து விட்டார்.

பின்னர் குடும்பத்தினர் விரைவில் கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, நீது இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டார்கள். அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக லைக் கான் நீதுவை திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், ஆனால் சிறுமி அதை மறுத்துவிட்டதாகவும் கவுசல் குற்றம் சாட்டினார்.

லைக் கான் தங்கள் குடும்பத்திற்கு தெரிந்தவர் என்றும் ஒரு முறை அவர்களுடன் தங்கியிருந்தார் என்றும் அவர் கூறினார். கானின் திருமண வற்புறுத்தல் குறித்தும், பின்னர் தான் மறுத்ததையும் நீது தனது தாயிடமும் தெரிவித்திருந்தார்.

‘சிறுமியின் குடும்பம் முன்னர் பவானாவில் தங்கியிருந்தது. அங்கு குற்றம் சாட்டப்பட்ட லைக் கான் தங்கள் அண்டை வீட்டாராக இருந்தார். இருவரின் குடும்பங்களும் ஒருவருக்கொருவர் தெரிந்திருந்தன. லைக் கான் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். மேலும் ஒரு மாதம் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் 11’ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சிறுமியை, திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்தார்.’ என ரோகிணி பகுதியின் டி.சி.பி பி.கே.மிஸ்ரா கூறினார்.

‘நீது, லைக் கான் தன்னை துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் என்னிடம் சொன்னார். அவன் வீட்டிற்கு வந்து கவுசலை உணவு பெற அனுப்பியபோது நான் சில வேலைகளில் இருந்தேன்.’ என்று நீதுவின் தாய் ராணி தேவி கூறியுள்ளார்.

இந்நிலையில் கொலை செய்துவிட்டு தற்போது தப்பி ஓடிய லைக் கானை கைது செய்ய தில்லி காவல்துறை ஆறு குழுக்களை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!