புனித பேழைக்காக… மொத்தமாக “800 பேர்”… மனதை பதைபதைக்க வைக்கும் கோர சம்பவம்.!


எத்தியோப்பியாவில் 800 பேரை கொடூரமாக கொன்று குவித்து புனித பேழையை கொடூர கும்பல் திருடிச் சென்றுள்ளது.

எத்தியோப்பியாவின் புனிதமான நகரம் என்று அழைக்கப்படும் ஆக்சன் என்ற பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் தான் புனித பேழை பல காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை கொள்ளையிட வந்த கும்பல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. அதன் இறுதியில் 800 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது ஆனால் இச்சம்பவம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.

ஏனென்றால் எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையை தடை செய்துள்ளதால் எந்தவித தகவலும் வெளிவராமல் இருந்தது. அதோடு சம்பவத்தன்று பயங்கரமான துப்பாக்கி சத்தம் ஒன்று கேட்டது அதைக்கேட்டு அங்கிருந்த பாதிரியார்களும் மற்றவர்களும் புனித பேழையை காக்கும் நோக்குடன் தேவாலயத்திற்கு விரைந்து ஓடி உள்ளனர்.

அங்கு குவிந்துள்ள மக்கள் கூட்டத்தினை கொள்ளை கும்பல் கொன்று குவித்துள்ளது. தேவாலயத்திலும் அதனை சுற்றியுள்ள தெருக்களிலும் சடலங்கள் பல நாட்கள் கிடந்ததாகவும் இதில் உயிர்தப்பிய பாதிரியார் ஒருத்தர் கூறியுள்ளார். இச்சம்பவத்தில் சுமார் 800 பேர் இறந்திருக்க கூடும் எனவும் அவர் கூறியிருக்கிறார். அந்தக் கொள்ளை கும்பல் எந்தவித மனிதநேயம் இன்றியும் அந்த பேழையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்டு,அரசு சார்பு படையினரால் செய்யப்பட்ட வெறிச்செயல் என பல்கலைக்கழக ஆசிரியர் getu mak தெரிவித்துள்ளார்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!