பூனையின் கழிவிலிருந்து காபியா..? எங்கு தெரியுமா..?


பூனையின் கழிவிலிருந்து காப்பி தயாராகி வருவதாகவும் அந்த காபி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

புனுகுப்பூனை காட்டில் திரியும் விலங்கு. இந்த விலங்கை கூண்டில் அடைத்து வைத்து நடுவில் கம்பி இருக்கும். இந்த பூனை கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் தன்னுடைய ஆசன வாய்ப் பகுதியை அடிக்கடி தேய்க்கும். அப்போது அதன் உடம்பிலிருந்து மெழுகு போன்ற பொருள் அந்தக் கம்பியில் ஒட்டிக்கொள்ளும் இதனைப் புனுகு என்பார்கள். இதன் காரணமாக இந்த பூனைக்கு புனுகுப்பூனை என பெயர் வந்தது.

காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு வாழும். அதன் கொட்டைகளை வெளியேற்றும். அந்த கொட்டைகள் சேகரிக்கப்பட்டு அதை உலர்த்தி வறுத்தெடுக்கின்றனர். இந்த கொட்டையில் இருந்து காப்பி தயாரிக்கப்படுகிறது. அந்த காப்பி சீவெட் காபி என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பி மிகவும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். இந்தோனேசியா போன்ற பகுதிகளில் கழிவு காப்பிக்கொட்டை ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்கபடுகிறது.

பூனையின் கழிவில் இருந்து காப்பி மட்டுமில்லாமல் அதனுடன் சந்தனப் பவுடரை கலந்து வாசனை பொருளும் தயாரிக்கின்றனர். இதிலிருந்துதான் ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் எப்போதும் கருதப்படுகிறது. முன்னோர்கள் புனுகின் மூலம் இறையருள் மற்றும் உடல் நலனை ஒருங்கே அடைய முடியும் என்று கூறியுள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கின்றனர். நம்மூரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!