ஜெ.வின் அறையை திறந்தால் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும்…கேரள நம்பூதிரி பகீர் தகவல்..!


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள அவரது அறையை திறந்தால் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என்று கேரள நம்பூதிரி வேங்கட சர்மா பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள நம்பூதிரி வேங்கட சர்மா சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜெயலலிதாவின் ஆவி பழி வாங்க நினைத்த 31 பேரில் கொஞ்சம் கொஞ்சமாக பழி வாங்கி விட்டது. எனினும் ஆவியை அடக்குவதற்காக முயற்சியில் அவர்கள் ஈடுபட்ட காரணத்தால் பழி வாங்கும் மரணத்தின் தன்மை குறைந்திருக்கிறது.

31 பேரும் சேர்ந்துதான் ஆவியை அடக்கும் பூஜைகளை செய்துள்ளனர். என் வாழ்க்கையை சின்னா பின்னபடுத்தியவர்களை நான் விடமாட்டேன் என்று ஜெயலலிதாவின் ஆவி சொல்லியது. நான் எடுத்த முடிவுகள் எனக்கு எதிராகவே மாறி விட்டதென மனம் உருகி சொல்கிறார்.ஜெயலலிதா, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் முத்துசாமியையும் வெளியே அனுப்பியது தவறு என்கிறார்.


பின் விளைவுகள் ஜெயலலிதாவின் ஆவி தற்போது அவரது போயஸ் கார்டன் வீட்டில்தான் இருக்கிறது. அந்த இடத்தை விட்டு அவர் போவதில்லை. எல்லா இடங்களிலும் தெய்வாதீனமாக அவர் உலவி வருகிறார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் அறையை திறந்தால் பின் விளைவுகள் ஏற்படும். அரசு அதிகாரிகள் அறையை திறந்தால் இந்த அரசு கவிழ்ந்துவிடும். பூஜைகள் போயஸ் கார்டனில் ஏராளமான மந்திரங்கள், பூஜைகள் புதைந்திருக்கிறது.

அதனால் அவரது அறையில் தங்கம், வைடூரியம் என ஏராளமான நகைகள் இருக்கலாம். போயஸ் கார்டனில் பல மந்திர சக்திகள் உள்ளன. பக்தியின் உச்சத்துக்கே போனவர் ஜெயலலிதா. முதல்வர் என்பதை காட்டிலும் மந்திரங்களை ஈர்ப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம்.

வாரிசு இருப்பது உண்மை
இதனால்தான் எல்லா எதிர்ப்புகளையும் மீறி அவரால் நம்பர் ஒன்னாக இருக்க முடிந்தது. ஜெயலலிதாவின் அறையை திறந்தால் எதிர்மறையான விஷயங்கள் நிறைய உள்ளன.

ஜெயலலிதாவுக்கு ஒரு வாரிசு இருப்பது உண்மைதான். அதை அவரே ஒப்பு கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பலத்தை… புத்திர ஸ்தானம் அவருக்கு எதிரிடையாகவே உள்ளது. ஜெயலலிதாவுக்கு புத்திர பாக்கியம் இருந்தது. சோபன் பாபு தெய்வ நிலையை அடைந்துவிட்டார். அவரை கூப்பிட முடியாது. எடப்பாடி பழனிசாமியின் பலத்தை ஜெயலலிதாவின் ஆவி பெருக்கி வருகிறது.-Source: tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!