“புது” பூகம்பம்… அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா.!


சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையானார். இதனையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா 10 நாட்கள் அமைதிக்கு பின்னர், நேற்று தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.

2017ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

எனவே அதிமுக மீட்டெடுப்பதில் இருந்து சசிகலா பின்வாங்க மாட்டார் என்று தெரிகிறது. சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வருகின்ற மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு காரணமாகத் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.- source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!