சுதந்திரமடைந்த பிறகு.. முதன்முறையாக பெண்ணுக்கு தூக்குத்தண்டனை.!!


இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காதலித்தவரை திருமணம் செய்ய தடையாக இருந்த குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில், பெண் மற்றும் அவருடைய காதலனுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் வசிப்பவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் வருடம் ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது.

இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!