இந்த சீரியல் நடிகை உண்மையில் யார் தெரியுமா..? பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்..!


தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. இதில் மாமியார் வேடத்தில் நடிப்பவர் பிரவீனா.

கேரளாவை சேர்ந்த பிரவீனா நாயர் தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பெரிதளவில் நடிக்கவில்லை என்றாலும் 50க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். 100 டேஸ் ஆப் லவ் என்ற ஹிட் படத்தில் நடித்திருப்பார்.


தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். தற்போது ராஜா ராணி சீரியலில் மாமியார் வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. எம் ஜி ஆர் துவங்கி அஜித், விஜய் திரைப்படங்கள் வரை நடித்தவர் ஸ்ரீவித்யா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காலமானர். தற்போது இவர்களது பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!