சசிகலா முதல்வராவார்… 30 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த சித்தர்.!


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த பிறகு விடுதலையான சசிகலா, கடந்த 8-ம் தேதி பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பினார். அப்போது, அவருக்கு அமமுக தொண்டர்களும் சசிகலாவின் ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சசிகலா தமிழகம் திரும்பிய போது, அவர் வந்த காரில் அதிமுக கொடி மற்றும் நான் யாருக்கும் அடங்கமாட்டேன், அதிமுக-வை மீட்டெடுப்பேன் என்று சசிகலா கூறியுள்ளதால் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக விளங்கிய வலம்புரி ஜான் என்பவர் வார்த்தைச் சித்தர் என்று அழைக்கப்பட்டவர். இவர், 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்ற சமயத்தில் நக்கீரன் வார இதழில் வணக்கம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார்.


இதையடுத்து தற்போது, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு வலம்புரி ஜானின் கட்டுரைகள் வைரல் ஆக பரவி வருகிறது. சீவக சிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனை போல், தான் விழுவது தெரியாமல் வீழ்ந்து வருகிறார்.

கம்பீரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாக தான் இருக்கிறார். நான் இதைச் சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒரு நாள் முதல்வரானதுபோல், அவருடைய நிழலாகவே இருக்கின்ற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார்.

இதற்கு பல பாடங்களை ஜெயலலிதாவிடம் இருந்து அவர் கற்றுக் கொள்வார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். அப்படி ஒரு நாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் என எழுதியுள்ளார்.- source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!