தாய்க்கு தடுப்பூசி போட முடியவில்லை… மாஸ் காட்டும் இளைஞன்.!


அரசாங்க வலைத்தளம் வேலை செய்யாமல் போனதால் தன் சொந்த முயற்சியில் இலவச வலைத்தளத்தை உருவாக்கிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுபவர் 31 வயதுடைய ஹூஜ்மா என்பவர். இவர் கடந்த மாதம் தன் அம்மாவிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் போட ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதற்கான அரசு போர்ட்டல்கள் சரியாக வேலை செய்யவில்லை.

மேலும் ஒவ்வொரு வலைத்தளங்களும் வெவ்வேறு வித்தியாசமான சைனப் முறைகளுடன் இருந்ததால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தானே ஒரு எளிய வலைத்தளத்தை உருவாக்க ஹூஜ்மா முடிவு செய்தார். நியூயார்க்கில் உள்ள அனைவருக்கும் உதவும் வகையில் இலவச வலைதள சேவையை அவர் தொடங்கி அதற்கு டர்போவாக்ஸ் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இரண்டே வாரங்களில் வெறும் 50 டொலர் செலவில் இந்த வலை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு இந்த வலைதளம் பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் ட்விட்டர் பக்கத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஸ்டேட்டஸ் லைவாக வழங்கப்படுகிறது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!