விபச்சார வழக்கில் சிக்கி.. நடிகை வினிதாவின் தற்போதைய நிலை..!


தமிழ் திரையுலகில் சின்ன ஜமீன் என்ற படம் மூலம் 1993ல் அறிமுகமானவர் வினிதா. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் வினிதா.

ஆனால் கடந்த 2003ஆம் ஆண்டு ஒரு விபச்சார வழக்கில் தன் தாயுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். கஸ்டமர்களிடம் 1.5 லட்சம் ருபாய் வரை வாங்கி காருக்குள்ளேயே விபச்சாரம் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மீது எழுந்த குற்றசாட்டுகள் நிருபிக்கப்படாததால் விரைவில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு வினிதாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பின் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என திரையில் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் துணை வேடங்களில் தலைகாட்டிய வினிதாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் எடை ஏறி ஆளே மாறி போய் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!