மஞ்சள் நிறமாக மாறிய 60 வயது முதியவரின் உடல்… அதிர வைத்த காரணம்..!


சீனாவில் 30 வருடங்களாக தொடர்ந்து புகைப்பிடித்த 60 வயது முதியவருக்கு உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.

சீனாவில் 60 வயது முதியவர் ஒருவர் தொடர்ந்து 30 வருடங்களாக புகைபிடித்ததால் திடீரென அவர் உடல் மஞ்சள் நிறமாக மாறியது. இதையடுத்து அந்த முதியவரை அவர்களின் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த முதியவருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளதால் அவரது உடல் முழுவதும் மஞ்சளாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிதீவிரமாக இருந்த காரணத்தினாலும் அதிகளவு புகை பிடித்ததாலும் தோல் தன்னுடைய இயல்பு நிறத்தன்மையை இழந்து மஞ்சளாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள் அவரது கணையத்தில் இருந்த பித்த நீர் கட்டியை அகற்றி தொடந்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் அந்த 60 வயது முதியவரின் உடல் மீண்டும் இயல்பு நிறத்திற்கு மாறியுள்ளது. மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த முதியவரிடம் இதற்குமேலும் நீங்கள் புகை பிடித்தால் அது உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் மிரட்டி உள்ளனர்.- source: seithi.alai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!