மணக்கோலத்திலே பெண்ணின் உயிர் பிரிந்தது… அப்படியே உறைந்து போன மாப்பிள்ளை!


கல்யாண பொண்ணுக்கு 40 வயசாகிறது.. மாப்பிள்ளைக்கு 63 வயசாகிறது.. தடபுடலாக கல்யாணம் நடந்து முடிந்த அடுத்த சில நிமிஷத்தில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துவிட்டது..!

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்பாய்… இவருக்கு 63 வயசாகிறது.. ரொம்ப வருஷமாக இவருக்கு கல்யாணமே நடக்கவில்லை.. ஒருக்கட்டத்தில் திருமணம் செய்ய முயலும்போது, பெண் தேடியும், யாருமே இவரை திருமணம் செய்ய முன்வரவில்லை..

இவரது அண்ணன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர், தங்கை ஒரு விதவை.. கல்யாண்தான் இவர்கள் எல்லாரையுமே கவனித்து கொள்ள வேண்டும்.. இருந்தாலும் வயது ஆக ஆக, தனக்கும் ஒரு துணை தேவை என்று நினைத்தார்.. குடும்ப பாரம் ஒருபக்கம் இருந்தாலும், 63 வயசாகி விட்டதே என்று பெரும் கவலை கொண்டார்.

இப்போதாவது ஒரு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தார்.. அப்போதுதான் லைலாபென் என்பவர், கல்யாணை திருமணம் செய்ய முன்வந்தார்.. லைலாவுக்கு வயசு 40 ஆகிறது.. எல்லா விஷயத்தையும் கேள்விப்பட்டு கல்யாணை மணக்க சம்மதித்தார்.. லைலா சம்மதம் சொன்னதுமே, கல்யாண் துள்ளி குதித்தார்.. தன் கனவு, ஆசையெல்லாம் இனி நிறைவேறும் மகிழ்ச்சியில் இருந்தார்.. அவர் மட்டுமல்ல, அவரது உறவினர்களும் இதே மகிழ்ச்சியில் இருந்தனர்.

தேதி குறித்தார்கள்.. அந்த ஊரையே கல்யாணத்துக்கு அழைத்திருந்தனர்.. கல்யாண் சிறுவயது முதல் பட்ட கஷ்டங்களை பார்த்த கிராம மக்கள், அவரை மனசார வாழ்த்த திரண்டு வந்தனர்.. நேற்று முன்தினம் சிறப்பாக கல்யாணம் நடந்துமுடிந்தது.. பிறகு புதுமணத்தம்பதி வீட்டிற்குள் சென்றனர்.. உள்ளே நுழையும்போது, மணமக்கள் முகத்தில் மலர்ச்சி பொங்கி கிடந்தது.

அப்போதுதான், திடீரென லைலா சுருண்டு தரையில் விழுந்துவிட்டார்.. இதனால் கல்யாண் ஷாக் ஆனார்.. சுற்றி இருந்தவர்களும் பதட்டமானார்கள்.. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள்.. ஆனால், லைலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர்.. இதை கேட்டதும் அப்படியே கதறி கதறி அழுது துடித்தார் கல்யாண்.. மணப்பெண் உடையிலேயே இறந்து போயிருந்தார் லைலா…

மாப்பிள்ளை கோலத்தில்தான் மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி உடலையும் தகனம் செய்தார் கல்யாண். இத்தனை வருடம் கல்யாணம் ஆகாமல் இருந்தநிலையில், ஒரு வழியாக 63 வயசிலாவது ஆகிறதே என்ற சந்தோஷம் கொஞ்ச நேரம்கூட தங்கவில்லை.. மொத்த கிராமமும் சோகத்தில் தத்தளித்து வருகிறது.. கல்யாண் இன்னமும் அழுதபடியேதான் இருக்கிறார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!