பள்ளியின் பெண் முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன்! அரியானாவில் பயங்கரம்..!


அரியானா மாநிலத்தில் இன்று பள்ளியின் பெண் முதல்வரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில் விவேகானந்தா பள்ளியில் படித்துவரும் 12-ம் வகுப்பு மாணவன் இன்று நன்பகல் சுமார் 12 மணியளவில் அப்பள்ளியின் பெண் முதல்வர் ரிட்டு சாப்ரா என்பவரை நோக்கி திடீரென்று நான்குமுறை துப்பாக்கியால் சுட்டான்.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரிட்டு சாப்ரா சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அந்த மாணவனை கைது செய்த போலீசார், இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!